சர்ச்சைக்குள்ளான கிரிக்கெட் காணொளி வெளியீட்டுக்கும் அணிக்கும் தொடர்பு இல்லை

(UTV|COLOMBO) தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சக வீரர்கள் ஏற்பாடு செய்திருந்த மதுபான விருந்தின் பின்னர் வீரர்களால் வெளியிடப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய காணொளி தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கிரிக்கெட் நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் பின்னர் வெற்றியினை கொண்டாடிய விருந்துபசாரத்தில் குசல் ஜனித் பெரேரா மற்றும் சுரங்க லக்மால் ஆகிய வீரர்கள் தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொண்டுள்ளதோடு அது காணொளியாக சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையினை கிளப்பியிருந்த நிலையில், குறித்த காணொளியை படமெடுத்து இணையத்தளத்தில் பதிவேற்றியமை தொடர்பில் ஒருவர் அடையாளங் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் தான் அணித் தலைவர், பயிற்சியாளர், சக வீரர்களுடன் இது தொடர்பில் கதைத்ததாகவும், இது தொடர்பில் யாரும் பதற்றமடையவோ அணியினை விமர்சிக்கவோ வேண்டாம் எனவும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியானது தொடர்ந்தும் விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் தனி நபர் தேவையின் நிமித்தம் இவ்வாறு காணொளியாக்கப்பட்டு சமூக வலைதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதோடு, குறித்த நிகழ்வினால் இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவும் விமரசனங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *