இலஞ்சம் கோரிய மதுவரி திணைக்கள பரிசோதகர் மற்றும் சாரதியும் கைது

(UDHAYAM, COLOMBO)  – இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் மதுவரி திணைக்கள பரிசோதகர் மற்றும் சாரதி ஒருவரும் நேற்று பலாங்கொடை நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுவரி திணைக்களத்தின் பலாங்கொடை காரியாலயத்தில் சேவையாற்றும் இரண்டு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் என்பவற்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து கஞ்சா போதைப் பொருளை மாத்திரம் வைத்திருந்த குற்றச்சாட்டிற்காக வழக்கு தொடர்வதாகவும் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்தமைக்காக வழக்கு தொடராதிருப்பதற்காக ஒரு லட்சம் ரூபா இலஞ்சமாக கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இலஞ்சம்பெ ற்று கொண்டமை தொடர்பில் தகவல்கள் இருப்பின் உடனடியாக அறிவிக்குமாறு இலஞ்சம்ம ற்றும் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழு பொது மக்களை கோரியுள்ளது.

இதற்காக 24 மணி நேரமும் இயங்கும் தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1954 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அது தொடர்பான தகவல்களை வழங்க முடியும் என்றும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *