பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டை எட்டி உதைத்த நபர்… (VIDEO)

தென்னாப்பிரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டை ஒருவர் தாக்கும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ‘அர்னால்டு கிளாசிக் ஆப்பிரிக்கா’ எனும் வருடாந்திர விளையாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற 71 வயதாகும் ஹாலிவுட் நடிகரும், அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான அர்னால்டை எதிர்பாராத சமயத்தில் அவரது முதுகுபுற பகுதியை ஒருவர் பாய்ந்து வந்து எட்டி உதைக்கிறார்.

அர்னால்டை பாய்ந்து வந்து எட்டி உதைத்த நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலதிக அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில், தாக்குதல் நடத்திய நபரை அர்னால்டின் பாதுகாவலர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றினர்.

மேற்படி இந்த சம்பவத்தை வெளிக்காட்டும் காணொளியை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்ட அர்னால்டு, தனக்கு நேர்ந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும், அதே சமயத்தில் ‘கவலைப்படும்படியாக எவ்வித பிரச்சனையும் இல்லை’ என்றும் தெரிவித்தார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *