(UTVNEWS | COLOMBO) – அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளரும், ஜனாதிபதி டிரம்பின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளருமான சாரா சாண்டர்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அமரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
குறித்த டுவிட்டர் பதிவில் டிரம்ப் தெரிவிக்கையில்; “3½ ஆண்டுகளாக சிறப்பான பணிக்கு பிறகு, சாரா சாண்டர்ஸ் இந்த மாத இறுதியில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுகிறார். சாரா அற்புதமான திறமைகளுடன் கூடிய மிக சிறப்பான நபர். அவர் சிறப்பான பல பணிகளை செய்திருக்கிறார். நன்றி சாரா” என தெரிவித்திருந்தார்.