(UTV|COLOMBO) – வரகாபொல பகுதியில் இன்று(31) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு விமானப்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கர வண்டி ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
முச்சக்கரவண்டி சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் வரகாபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.