இரத்தப் பரிசோதனைகளுக்கு கட்டண வரையறை

(UTV | COLOMBO) – டெங்கு நோய் தொடர்பான இரத்தப் பரிசோதனை மற்றும் ஏனைய மருத்துவப் பரிசோதனைகளுக்கான கட்டண அறவீடு வரையறை செய்யப்படவுள்ளது.

இதற்கு அமைவாக அடுத்த ஆண்டு முதல் முழுமையான இரத்தப் பரிசோதனை (Full blood count) மற்றும் NS1 (Dengue Antigen Test) ஆகியவற்றுக்கு இந்த கட்டண நிர்ணய அறவீட்டு முறை அமுல்படுத்தப்படும் என டெங்கு நோய்த்தடுப்பு பிரிவின் பணிப்பாளர் அநுர ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

சில பரிசோதனைகளுக்காக சிலர் அதிக கட்டணத்தை அறவிடுகின்றமையும் கவனத்தில் கொள்ளப்படுகின்றது. NS1 (Dengue Antigen Test) பரிசோதனைக்காக 2350 ரூபாவில் இருந்து 2400 ரூபா வரையில் கொழும்பில் உள்ள 2 வைத்திய சாலைகளில் அறவிடப்படுகின்றது. ஆனால் முழுமையான இரத்தப் பரிசோதனைக்கு 600 ரூபா மட்டுமே அறவிடப்பட வேண்டும்.

இந்த விலை நிர்ணயத்தை அனைத்து தனியார் வைத்திய சாலைகளும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த கட்டண நிர்ணயத்தை அடுத்து மேற்கொள்ளப்படும் பரிசோதனையின் தரம் குறைவடையக் கூடாது அத்தோடு சேவைகளும் தரமுள்ளதாக அமைய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *