(UTV|கொழும்பு) – சீன வௌிவிவகார அமைச்சர் வேன்க் யீ மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் அலிஸ் வேல்ஸ் ஆகியோர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
சீன வௌிவிவகார அமைச்சர் வேன்க் யீ விஜயத்தின்போது அவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வௌிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இதேவேளை, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் அலிஸ் வேல்ஸ் அரசாங்கத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகள் சிலரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
மேலும், மனித உரிமைகள், நீதி, ஜனநாயகம் மற்றும் சுபீட்சத்தை அடைவதற்கு சுதந்திரம் மற்றும் திறந்த இந்து பசுபிக் வலய பொது அபிலாஷைகள் உள்ளிட்ட வலய மற்றும் இரு தரப்பு பிரச்சினைகள் குறித்து அலிஸ் வேல்ஸின் இந்த விஜயத்தின்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதேவேளை, ரஷ்ய வௌிவிவகார அமைச்சர் சேர்ஜி லெவ்ரோக்கும் இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.
இதன்போது, ரஷ்ய வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.