சாதாரண பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டின் 2ஆம் கட்டம்

(UTV|கொழும்பு)- கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்வி பொதுத் தராதர பத்திர சாதாரண பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த பணிகளுக்காக 3 பாடசாலைகள் முழு அளவில் மூடப்படவுள்ளதுடன் 24 பாடசாலைகள் பகுதி அளவில் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மஹாமாய மகளிர் வித்தியாலயம், கண்டி புனித அந்தோனி மகளிர் வித்தியாலம், குருணாகல் மல்வபிட்டிய ஊறுறு கன்னங்கர வித்தியாலயம் என்பன முழு அளவில் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *