மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் ஜனாதிபதி இடையே சந்திப்பு [VIDEO]

(UTV|கொழும்பு) – தொழிநுட்ப முறைமைகள் மற்றும் சுற்றாடல் சட்ட திட்டங்களுக்கேற்ப நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் சிலாபம் ஆயர் உள்ளிட்ட பிரதேசத்தின் சமயத் தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது.

இந்தநிலையில் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் நான்காவது கட்டம் தொடர்பான திட்டத்திற்கு பொறுப்பான நிறுவனம் மற்றும் அதிகாரிகளை அழைத்து உடனடியாக பணிப்புரைகளை வழங்குவதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 3வது கட்டத்தின் கீழ் 900 மெகா வோட்ஸ் மின் உற்பத்தி செய்யப்படுகின்றது. அதன் நான்காவது கட்டம் குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.

நாட்டின் துரித அபிவிருத்திக்கு மின்சக்தி தீர்க்கமானதொரு அம்சமாகும்.
எனவே மாற்று மின்சக்தி குறித்து உடனடியாக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது விளக்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *