இரத்மலானையில் ரயில் சாரதிப் பயிற்சி பாடசாலை

(UTV|கொழும்பு)- இரத்மலானையில் ரயில் சாரதிப் பாடசாலையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நாட்டின் வேலையில்லாப் பிரச்சினைக்குத் தீர்வாக இவ்வாறான பாடசாலையொன்றின் தேவை இருப்பதாக ரயில் சேவை இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

அலுவலக ரயில் சேவையை செயற்திறன் மிக்கதாக முன்னெடுத்தல், ரயில் இடைமாறல் இடங்களின் எண்ணிக்கை என்பவற்றை அதிகரித்தல் மற்றும் பிரதான பாதையிலான சேவைகளைக் கூடுதலாக மேற்கொள்ளல் உள்ளிட்ட ரயில் வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக ரயில் சேவை இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த காலப்பகுதியில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட ரயில் எஞ்சின்கள் நாட்டிலுள்ள ரயில் பாதைகளில் சேவையில் ஈடுபடுத்த முடியாது என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *