இணையவழி பாதுகாப்பு குறித்து முக்கிய அறிவித்தல்

இணையவழி பாதுகாப்பு குறித்து முக்கிய அறிவித்தல்

(UTV|கொழும்பு) – தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் மற்றும் அதிகரித்து செல்லும் இணையவழி குற்றங்களை உடனடியாக தீர்க்கும் நோக்கில் தேசிய இணையவழி பாதுகாப்பு உபாயலத்தின் கீழ் புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய உத்தேச இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை தயாரிக்குமாறு பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால், கமல் குணரத்னவினால் இலங்கை கணணித்துறை அவசர பதிலளிப்பு பிரிவிற்கு ஆலாசனை வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இணையவழி பாதுகாப்பு அச்சுறுத்தலை சூட்சுமமான முறையில் தடுக்க மற்றும் முகாமைத்துவம் செய்ய முடியும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இணையவழி ஊடுறுவல்கள், மூலம், கடனட்டை மோசடி, பழிவாங்குதல், பயங்கரவாதம் உள்ளிட்ட பல குற்றச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடதக்கது.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )