கொரோனா வைரஸ் : பலி எண்ணிக்கை 300ஐ தாண்டியது

(UTV|சீனா) – உலகினையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 304 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 2,590 பேர் புதிதாக, இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் என இனம்காணப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்தை தொட்டுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவலை அடுத்து இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்று (சனிக்கிழமை) இரவு 304 ஐ எட்டியது என நாட்டின் தேசிய சுகாதார ஆணைக்குழு மேற்கோள் காட்டி அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அனைத்து புதிய இறப்புகளும் மத்திய ஹூபே மாகாணத்திலேயே பதிவாகியது என்றும் இது கொரோனா வைரஸ் தாக்கத்தினாலேயே நிகழ்ந்துள்ளது என்பதனையும் சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த வைரஸ் பரவலை அடுத்து, பிற நாடுகள் சீனாவின் மீது பயணத் தடைகளை விதித்துள்ளதுடன் விமான நிறுவனங்கள் விமான சேவைகளையும் முடக்கியுள்ளன. மேலும் பல நாடுகள் சீனாவில் உள்ள தமது நாட்டவர்களை வெளியேற்றும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *