கிடைக்கப்பெற்ற சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்

(UTV|கொழும்பு) – கால­னித்­துவ ஆட்­சியில் இருந் து 1948ஆம் ஆண்டு சட்­ட­ரீ­தி­யாக கிடைக்கப் பெற்ற சுதந்­திரம் 2015ஆம் ஆண்டு தவ­றான அர­சியல் செயற்­பாட்டின் ஊடாக இல்­லாமல் போகும் அபா­யத்தை எதிர்கொண்­டது. கிடைக்கப்பெற்ற சுதந்­திரம் பாது­காக்­கப்­பட வேண்டும் என்ற திட­சங்­கற்பம் ஜனா­தி­பதி தேர்­தலில் கிடைக்கப்பெற்ற பெறு­பேற்றின் ஊடாக வெற்றி பெற்­றுள்­ளது.

நாட்டில் வாழும் அனைத்து பிர­ஜை­களும் அபி­வி­ருத்தி முன்­னேற்­றத்­திற்கு முழு ஒத்­து­ழைப்பு வழங்­கு­வார்கள் என்ற நம்­பிக்கை உள்­ளது என பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ இலங்­கையின் 72ஆவது சுதந்­திர தின செய்­தியில் தெரி­வித்­துள்ளார்.

பிர­தமர் வெளி­யிட்­டுள்ள சுதந்­திர தின செய்­தியில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, இலங்­கையின் 72ஆவது சுதந்­திர தினத்தை நாம் இன்று கொண்­டா­டு­கின்றோம்.

கடந்த சில வரு­டங்­களில் 1948ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 4ஆம் திகதி கிடைக்கப்பெற்ற சுதந்­திரம் பாரிய சவா­லுக்­குட்­பட்­டதை அவ­தா­னிக்க முடிந்­துள்­ளது. சுதந்­தி­ரத்தை பெற்றுக்கொள்­வது மற்றும் அதனை பாது­காத்துக் கொள்­வது ஆகி­ய­ன இரு பிரி­வாக நோக்­கப்­பட்ட இரு அம்­சங்கள் என்­பதே நாம் அந்த அனு­ப­வத்தின் ஊடாக கற்றுக்கொண்ட பாட­மாகும்.

1948ஆம் ஆண்டு சட்ட ரீதி­யாக கிடைக்கப்பெற்ற இந்த சுதந்­திரம் 2015ஆம் ஆண்டு பிழை­யான அர­சியல் செயற்­பாட்­டினால் இல்­லாமல் போகும் நிலை காணப்­பட்­டது. கிடைக்கப் பெற்ற சுதந்­திரம் பாது­காக்­கப்­பட வேண்டும் என்ற திட­வு­றுதி மக்கள் மத்­தியில் காணப்­பட்­டன. இந்த உறு­திப்­பாட்டை கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலின் பெறு­பே­றுகள் ஊடாக அறிந்துகொள்­ளலாம்.

சுதந்­திரம் கிடைத்த 72 ஆண்­டு­களை நாம் மீட்­டிப்­பார்க்க வேண்டும்.அவற்றில் மகிழ்ச்­சி­ய­டைய கூடிய பல விட­யங்கள் உள்­ளன. அவ்­வப்­போது ஏற்­பட்ட நெருக்­க­டியின் மத்­தி­யிலும் கூட சர்­வ­சன வாக்­கு­ரிமை அடிப்­ப­டை­யி­லான பிர­தி­நி­தித்­துவ ஜன­நா­யக முறை இந்­நாட்டில் பாது­காக்­கப்­பட்டு வந்­துள்­ளது. எழுத்­த­றிவு, சுகா­தாரம் ஆகிய விட­யங்­களில் நாம் ஏனைய நாடு­களைவிட ஒப்­பீட்­ட­ளவில் முன்­னிலை வகிக்­கின்றோம்.சுதந்­தி­ர­மான ஊட­கத்­துறை காணப்­ப­டு­வ­து­டனும் மக்கள் பாது­காப்­பாக வாழும் சூழலும் காணப்­ப­டு­கின்­றன.நாம் 2006-–2014ஆம் ஆண்டு வரை­யான காலப்­ப­கு­தியில் பொரு­ளா­தார ரீதியில் சிறப்­பான இலக்­கு­களை பெற்றுக் கொண்­டுள்ளோம்.

அர­சியல் ரீதியால் பாதிக்­கப்­பட்­டுள்ள பொரு­ளா­தா­ரத்தை மேம்­ப­டுத்­து­வது எம் முன்னாள் உள்ள பிர­தான சவா­லாகும். புதிய அர­சாங்­கத்­து­டனும் புதிய தசாப்­த­த்து­டனும் சுதந்­திர தினத்தை கொண்­டா­டு­கின்றோம். மக்­க­ளி­டமும் குறிப்­பாக இளம் சமூகத்தின் மத்தியில் நாட்டை கட்டியெழுப்புவதற்கான உத்வேகம் தோற்றம் பெற்றுள்ளது. இதனால் இலங்கை பொன்னான எதிர்காலத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது என்ற செய்தியை இன்றைய நாளில் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *