கொழும்பு அண்மித்த பகுதிகளில் தூசி துகள்களின் செறிவு அதிகரிப்பு

(UTV|கொழும்பு) – கொழும்பு நகரத்தை அண்மித்த பகதிகளில் வளிமண்டலத்தில் தூசி துகள்களின் செறிவு தற்போதைய நாட்களில் மீண்டும் அதிகரிப்பதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மற்றும் கண்டி நகரங்களில் இந்த நிலைமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது என அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

தற்போதைய வறட்சியான காலநிலையுடன், மேலும் சில தினங்களில் வளிமண்டலத்தில் தூசு துகல்களின் செறிவு அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள வளி மாசடைவு தன்மையும் இதற்கு காரணமாக அமைவதாகவும் ஆய்வாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *