இத்தாலியில் இதுவரை 2,158 பேர் உயிரிழப்பு

(UTV|கொழும்பு) – கொரோன வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில் உலகளாவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 173 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் ஒரு இலட்சத்து 82 ஆயிரத்து 683 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 79 ஆயிரத்து 883 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கொரோனா தொற்றால் இத்தாலியில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 158 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக இத்தாலியில் 27 ஆயிரத்து 980 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் உள்ள அனைத்து உணவகங்கள், மதுபான நிலையங்கள் மற்றும் விடுதிகள் இன்று முதல் மூடப்படவுள்ளன.

வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நியுயோர்க் நகர முதல்வர் பில் டி பிளேசியோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமது நாட்டு பிரஜைகளை நாட்டிலிருந்து வெளியேற மற்றும் வெளிநாட்டு பிரஜைகளை நாட்டுக்குள் அனுமதிக்க மலேஷியா இரண்டு வாரங்களுக்கு தடை விதித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *