தேர்தலை பிற்போடும் அதிகாரம் தொடர்பில் ஜனாதிபதி கருத்து

(UTVNEWS | COLOMBO) -தேர்தலை பிற்போடும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு உண்டு. அதில் ஒருபோதும் தலையிடமாட்டேன். என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.

கொரோனா வைரஸ்தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி  செயலகத்தில் இடம் பெற்றது.

இக்கலந்துரையாடலில் பிரதமர், இராணுவத்தளபதி பாதுகாப்பு  செயலாளர், பதில் பொலிஸ்மா அதிபர் , சுகாதார அமைச்சர் , மற்றும்  விசேட வைத்திய நிபுணர்கள் , மற்றும் தொழிந்துறை வல்லுணர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டார்கள்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பொதுத்தேர்தலை  பிற்போடுமாறு குறிப்பிடுகின்றார்கள்.

ஜனாதிபதி தேர்தலில் பெற்றுக் கொண்ட மக்களாணையினை முறையாக செயற்படுத்த முடியாமல் போனதாலேயே பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கான திகதியை  நிர்ணயித்தேன்.

ஆட்சிப் பொறுப்பினை ஏற்கும் போது இடைக்கால கணக்கறிக்கையே சமர்ப்பிக்கபட்டிருந்தது.ஆனால் அபிவிருத்தி  ஒப்பந்தகாரர்களுக்கும், தொழிற்தரப்பினருக்கும் செலுத்த வேண்டிய கடன் தொகை பலமடங்கு  காணப்பட்டன.

அரசாங்கத்தின் செலவீனங்கள்  இன்றைக்கு இவ்வளவு தான் என்று ஒருபோதும் வரையறை செய்ய முடியாது. தேவைகள்  சூழ்நிலைகளுக்கு ஏற்ப அதிகரிக்கலாம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *