குத்தகை முறையின் கீழ் பெறப்பட்ட அனைத்து வாகனங்களுக்கு சலுகை

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக குத்தகை முறையின் கீழ் பெறப்பட்ட அனைத்து வாகனங்களுக்கான லீசிங் தவணைக் கட்டணம் மற்றும் வட்டி தொடர்பில் அரசு கவனம் செலுத்தி உள்ளது.

அதன்படி, முச்சக்கரவண்டி , பாடசாலை வேன், லொறி, உணவு பொருட்கள் ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படும் சிறிய அளவிலான வாகனங்கள், பஸ், வேன் போன்ற வாகனங்கள் போன்றவை குத்தகை முறையின் கீழ் பெறப்பட்ட அனைத்து வாகனங்களுக்கான லீசிங் தவணைக் கட்டணம் மற்றும் வட்டி ஆகியன செலுத்தப்படுவது 6 மாத காலங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *