பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் மீள் கவனம் செலுத்த வேண்டும்

(UTV | கொழும்பு) – பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிப்பது தொடர்பான முடிவுகளை தொற்று நோயியல் நிபுணர்கள் மற்றும் விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று எடுக்க வேண்டுமென இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

இது குறித்து ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கையிலேயே;

மே மாதம் 11 ஆம் திகதி நாட்டில் உள்ள பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் அறிவிக்கப்பட்டது.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது 241 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோன்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் மே மாதம் முதல் இரண்டு வாரங்கள் மிகவும் தீர்க்கமான நாட்களாக இருக்கும் என அறிவித்துள்ளது.

எனவே பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு அவசரப்படத் தேவையில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த முடிவு தொடர்பாக மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பதே, சங்கத்தின் நிலைப்பாடாகும் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *