(UTV | கொழும்பு) – நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
களனி கங்கை, களு கங்கை, ஜிங் கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் தற்போது அதிகரித்து வருவதாக, திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆறுகளை அண்மித்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் குறித்த திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.