அரசின் முடிவுகளால் பொருளாதாரத்தில் மீளவும் வீழ்ச்சி

(UTV| கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கையாள்வதற்கு தற்போதைய அரசு எடுத்துள்ள முடிவுகளினால் மீண்டும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சிக்கே செல்லும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.

இதனால் சிறந்த பொருளாதார திட்டங்களை அரசாங்கம் உருவாக்கி அமுல்படுத்த வேண்டும் என்கிற யோசனையையும் அவர் முன்வைத்துள்ளார்.

கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலக வர்த்தகத்தை பாதித்துள்ளது. தற்போதைய பதிவுகளுக்கு அமைய உலக பொருளாதாரமானது அதிகபடியாக குறைந்துவிட்டது. இலங்கையிலும் அப்படியே. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வருமானங்கள் வீழ்ந்துள்ளன.

அரசாங்கத்தின் வருமானமும் இழக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் எடுத்துள்ள சில முடிவுகளினால் பொருளாதார வளர்த்தியானது பூச்சியத்தினை அடைந்துள்ளதுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த சில நாட்களாக வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக இருந்த மக்கள் கூட்டம் பற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தாலும் அதிக சன நெரிசல் நகை அடகு வைக்கும் நிலையங்களிலேயே இருந்தது.

அதிர்ஷ்ட இலாபச்சீட்டு விற்பனையாளர் முதல் முச்சக்கர வண்டி சாரதிகள் வரையும், சுயதொழிலாளர்கள் மற்றும் அன்றாட வருமானம் பெறுவோர் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துள்ளனர். தனியார்துறை தொழிலாளர்களும் அசௌகரியத்தை சந்தித்துள்ளனர். தொழில்களும் இழக்கும் நிலை உள்ளது.

தற்போதைய நெருக்கடியானது தொடரும் மாறாக நீங்காது. இவ்வாறு வீழ்ந்துபோகும் துறைகளைப் பாதுகாப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல்வேறு நாடுகளும் இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ள துறைகளைக் கட்டியெழுப்ப நிதி ஒதுக்கீடுகளை செய்திருப்பதோடு இன்னும் சில நாடுகள் தமது மொத்த உள்நாட்டு உற்பத்திகளில் 10 வீதத்தை ஒதுக்கியுள்ளன.

எமது நாட்டில் 2 வீதமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒரு மாற்றமும் நிகழாது. இப்படியே இருந்தால் இன்னும் பலபல ஆண்டுகளுக்கு எம்மால் தலைதூக்க முடியாமல் போய்விடும் என முன்னாள் பிரதமர் அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *