2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டி – 02 வாரங்களுக்கு ஒரு முறை அறிக்கையளிக்குமாறு கோரிக்கை

(UTV | கொழும்பு) – விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அலஹப்பெருமவின் ஆலோசனைக்கு அமைய முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி விளையாட்டு மற்றும் இளைஞர் நடவடிக்கை அமைச்சின் செயலாளரினால் 2019 இல 24 இல் உள்ள விளையாட்டு தொடர்பிலான பிழைகளை தடுக்கும் வகையிலான சட்டத்தின் கீழ் உரிய விசாரணைகளை சட்ட ரீதியாக முன்னெடுக்குமாறு விளையாட்டு குற்றங்களைத் தடுப்பதற்கான சிறப்பு விசாரணை பிரிவுக்கு உத்தியோகபூர்வமாக முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

குறித்த விசாரணைகள் தொடர்பில் 02 வாரங்களுக்கு ஒருமுறை அறிக்கை ஒன்றினை தமக்கு வழங்குமாறும் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில், ஆட்ட நிர்ணயம் செய்யப்பட்டதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் சர்ச்சைக்குரிய கருத்து சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையினை கிளப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *