ஞானசார தேரருக்கு பாதுகாப்பு வழங்கவும் : ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிவிப்பு

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் அளிக்க நேற்றைய தினம்(18) மூன்றாவது நாளாகவும் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் கலகோட அத்தே ஞானசார தேரர் ஆஜராகியிருந்தார்.

அங்கு மேலதிகமாக அதிக தரவுகள் தேரரால் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு, கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் மதிப்புகளுக்கு என்ன நடந்தது என்பது பற்றியும் “வஹாபிசம்” தீவிரவாதத்தின் எச்சரிக்கை தொடர்பிலும் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கியுள்ளார்.

ஞானசார தேரர், ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட குண்டுதாரிகள் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு முன்னைய நாள் “ஸ்பேன் டவர்” வீட்டு கட்டிடத் தொகுதியினுள் பதிவு செய்த காணொளி ஒன்றினையும் காட்டியுள்ளார்.

குறித்த காணொளியில் “ஞானசார எனும் பேய்” என சஹ்ரான் இனால் பல சந்தர்ப்பங்களில் கருத்துத் தெரிவிக்கும் ஒளிப்படங்களும் உள்ளதால் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஞானசார தேரரிடம் இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன கோரியுள்ளனர்.

இது “வஹாபிசம்” என்றும் அவர்களது வாழ்க்கை மற்றும் படிப்புகள் தொடர்பில் கேள்வி கேட்கத் தடை. அது தொடர்பில் எங்களுக்கு கதைக்க முடியாது. அவ்வாறு கதைத்தால் நாம் பேய். சஹ்ரான்கள் பயிற்சி பெற்றது தீவிரவாதத்தினை பயின்றே..” என தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், நிகாப் மற்றும் புர்கா அணிவது தடை செய்யப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார். புத்தளம் பிரதேசத்தில் தாதியர்கள் கூட புர்கா அணிவதாக சாட்சியுடன் (புகைப்படத்துடன்) ஆணைக்குழுவுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தகவல் வழங்கியமை காரணமாக மரண அச்சுறுத்தல் உள்ளதாகவும் ஞானசார தேரருக்கு பாதுகாப்பு வழங்குமாறு ஆணைக்குழு, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாக்கும் அதிகாரச பைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *