2011 அணிக்கு இருந்த பிரதான பிரச்சினை மெத்யூஸ் : இன்னும் வீரர்கள் சட்ட ரீதியாகவே அழைக்கப்பட்டனர்

(UTV | கொழும்பு) – கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக அப்போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மஹிந்தானந்த அண்மையில் தெரிவித்திருந்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் அன்றைய தெரிவுக்குழுவின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான அரவிந்த டி சில்வா, இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

கிரிக்கெட் அணிக்கு அன்று இருந்த பிரதான பிரச்சினை ஏஞ்சலோ மெத்யூஸ் உபாதைக்கு உள்ளாகி இருந்தது எனவும் அணியின் பல சமநிலை பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இறுதிப் போட்டியில் விளையாட வேறு விளையாட்டு வீரர்கள் சட்ட ரீதியாகவே அழைக்கப்பட்டனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்திற்கும் தெரிவுக்குழுவின் அதிகாரியாக தான் உட்பட ஏனைய அதிகாரிகள் எந்த சந்தர்ப்பத்திலும் தயாராக இருப்பதாகவும் அரவிந்த டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *