(UTV | கொழும்பு) – தொழில் திணைக்களத்திற்கு ஒத்த இணையத்தளம் மூலம் மக்களின் தனிப்பட்ட தரவுகளை சேகரிக்கும் நடவடிக்கை ஒன்று இடம்பெற்று வருவதாக இலங்கை தகவல் தொழில்நுட்பச் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் குறித்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கையில்;
தொழிலாளர் திணைக்களத்தினால் வழங்கும் டொலர் 20,000 இலாபத்தினை பெற்றுக் கொள்ளக் கூடியதாக கூறப்படும் https://whatsget.online/labourdept எனும் இணையத்தள முகவரியின் கீழ் தொழில் திணைக்களத்திற்கு ஒத்த இணையத்தளம் ஒன்று இயங்குவதோடு குறித்த இணையத்தளத்துடன் இணைந்து இலாபத்தினை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்து குறுந்தகவல் ஒன்று சமூக வலைதளங்களிலும் செயலிகளிலும் வலம் வருகின்றது.
மேலும் குறித்த குறுந்தகவல் வைரலாக வாட்சப், முகநூல் மற்றும் மெசெஞ்சர் ஊடாகவும் சமூக வலைதளங்கள் ஊடாகவும் பகிரப்படுகிறது.
இது தொடர்பில் எமது இலங்கை தகவல் தொழில்நுட்பச் சங்கத்திற்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
குறித்த இணையத்தளம் இலங்கை பொதுமக்களின் தரவுகளை திரட்டுவதோடு கையடக்க தொலைபேசிகளது தரவுகளுக்கும் பாதிப்பினை ஏற்படுத்தும் நிலை உள்ளதாகவும் தொழில் திணைக்களத்தின் பெயரில் சமூக வலைதளங்களில் வலம் வரும் செய்திகள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் எமது இலங்கை தகவல் தொழில்நுட்பச் சங்கம் பொதுமக்களை கேட்டுக் கொள்கிறது.
ரஜீவ் யசிறு குருவிடகே மெதிவ்
தலைவர்
இலங்கை தகவல் தொழில்நுட்பச் சங்கம்
எனத் தெரிவித்துள்ளது.