(UTV | கொழும்பு) – ஜிந்துபிடிய மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள பாடசாலைகள் 11 இனை தொடர்ந்தும் மூடுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் கல்வியமைச்சுக்கு கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜிந்துபிடிய பகுதியில் நேற்றைய தினம் (02) கொவிட் 19 நோயாளர் ஒருவர் சமூகத்தில் இருந்து இனங்காணப்பட்டதனை தொடர்ந்து குறித்த பிரதேச மக்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.