(UTV|ஆப்பிரிக்கா) – ஆப்பிரிக்காவில் உள்ள ஐவரி கோஸ்ட் நாட்டின் பிரதமரான அமாடோ கோன் கோலிபாலி (Amadou Gon Coulibaly) உயிரிழந்துள்ளார்.
அந்நாட்டில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டமொன்றில் நோய்வாய்ப்பட்ட நிலையில் கலந்துகொண்ட பின்பு உயிரிந்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு மாதங்களாக பிரான்சில் தங்கியிருந்து இதய சிகிச்சை எடுத்துக் கொண்ட கோலிபாலி அண்மையில் ஐவரி கோஸ்ட் திரும்பினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் கோலிபாலி உடல்நலன் குறைவால் அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் உயிரிழந்துள்ளதாகவும் அதிபர் தெரிவித்துள்ளார்.