அமெரிக்க தூதரக கட்டடத்தை கைப்பற்றியது சீனா

(UTV | சீனா) – சீனாவின் செங்து (Chengdu) நகரில் உள்ள அமெரிக்க தூதரக கட்டடத்தை சீன அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

Chengdu நகரில் உள்ள அமெரிக்க தூதரக பணியாளர்கள் இன்று அங்கிருந்து வெளியேறியுள்ள நிலையில் சீன அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவுக்கமைய Texas, நகரில் உள்ள சீன தூதரகத்தின் நடவடிக்கைகள் கடந்த வாரம் இடைநிறுத்தப்பட்டதுடன் தூதரக கட்டடம் முழுமையாக மூடப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதற்கு பதிலடி வழங்கும் முகமாக சீனாவின் Chengdu நகரில் உள்ள அமெரிக்க தூதரக பணியாளர்களை 72 மணி நேரத்திற்குள் வெளியேறுமாறு சீனா உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையிலேயே குறித்த கால அவகாசம் நிறைவடைவதற்கு முன்பாக Chengdu நகரில் உள்ள அமெரிக்க தூதரக பணியாளர்கள் இன்று அங்கிருந்து வெளியேறியுள்ளதாக சீன அரச ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.

சீனாவின் Chengdu நகரில் அமெரிக்க துணைத்தூதரகம் கடந்த 35 வருடங்களாக செயற்பட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை Chengdu நகரில் உள்ள அமெரிக்க தூதரக கட்டடத்தில் காணப்பட்ட அமெரிக்காவின் தேசிய கொடி அகற்றப்பட்டமை தொடர்பான காணொளி இணையதளங்களில் வெளியிடப்பட்டதாகவும் சீன அரச ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *