பெய்ரூட் வெடிப்புச் சம்பவத்தில் 78 பேர் உயிரிழப்பு

(UTV|லெபனான் ) – லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 78 பேர் உயிரிழந்துள்ளதுடன், 4,000 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன

பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

துறைமுக களஞ்சியசாலையில் சுமார் 2,750 தொன் அமோனியம் நைட்ரேட் இரசாயனம் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்ததாக லெபனான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த வெடிப்பு சம்பவத்தால் பல்வேறு கட்டடங்கள் சேதம் ஆகியுள்ள நிலையில் காயமடைந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெடிப்புச் சம்பவத்தையடுத்து லெபனான் ஜனாதிபதி Michel Aoun உயர் பாதுகாப்பு பேரவையை கூட்டியதுடன் பெய்ரூட் நகரம் பேரழிவால் பாதிக்கப்பட்ட நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், லெபனானில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரித்துள்ள அந்நாட்டு அதிபர் மைக்கேல் அவசரகால நிதியிலிருந்து 100 பில்லியன் லிரா உடனடியாக விடுவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை பேரழிவு என்று குறிப்பிட்டுள்ள அந்நாட்டு அதிபர், இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், லெபனானிலுள்ள தமது நாட்டு பிரஜைகள், முகக்கவசம் அணிந்து வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறு லெபனானுக்கான அமெரிக்க தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *