கொழும்பு – ஷாங்காய் விமான சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

(UTV|கொழும்பு)- இலங்கை உட்பட மூன்று நாடுகளின் விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக சீனா அறிவித்துள்ளது.

சீனாவுக்கு வருகைத்தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலோனோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அபுதாபி – ஷாங்காய், மணிலா – ஷாங்காய் மற்றும் கொழும்பு – ஷாங்காய் இடையில் பயணிக்கும் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்த நடைமுறை எதிர்வரும் 17ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என சீனா தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு 4 வார இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *