(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
————————————————————————————–[UPDATE]
ரணில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலை
(UTV|கொழும்பு)- முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் இன்று(31) முன்னிலையாகவுள்ளார்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு கடந்த 21ஆம் திகதி அழைப்பு விடுத்திருந்த நிலையில், குறித்த தினத்தில் தனக்கு முன்னிலையாக முடியாது என ரணில் விக்ரமசிங்க ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்தார்.
ஆகஸ்ட் 31ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வருகைத் தருவதாகவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.