(UTV | சீனா) – தொழில் நுட்பத்தில் வல்லரசாக காட்டிக் கொண்டுள்ள சீனாவில் இந்நாட்களில் கனமழை பெய்து வருகின்ற நிலையில் மக்கள் பெரும் அல்லல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
சீனாவில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கன மழையால் யாங்ட்சி நதிக்கரையோர நகரங்களில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் சிக்கி வருகின்றன.
சீனாவின் மூன்று முக்கிய அணைகள் ஒரே நேரத்தில் திறந்து விடப்பட்டதால் முக்கிய சாலைப்பகுதி ஒன்று மூன்றே நிமிடங்களில் பெரும் வெள்ளக்காடாகி இயற்கைக்கு முன்பு வல்லரசுகள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்பதை தெளிவாக உணர்த்துவதாக உள்ளது.
கார்கள், கனரக வாகனங்கள் எல்லாம் காற்றடைத்த பலூன்கள் போல வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதுடன் யாங்ட்சி நதியின் குருக்கே கட்டப்பட்டிருந்த பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இதேவேளை 1970 ஆம் ஆண்டுக்கு பின்னர் மழை வெள்ளத்தால் சீனாவில் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கொவிட் 19 (கொரோனா) தொற்றினை உலகளவில் சீனா பரப்பியிருந்ததாகவும் அவற்றினால் தான் சீனாவுக்கு இந்நிலை என்றும் சமூக வலைதளங்களில் எதிர்ப்பலைகள் எழுந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.