New Diamond கப்பலின் கெப்டனிடம் வாக்குமூலம் பதிவு

(UTV | காலி) – தீப்பரவலுக்கு உள்ளான MT New Diamond கப்பலின் கெப்டனிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

குறித்த வாக்குமூலம் தொடர்பிலான விடயங்களை நாளை(14) நீதிமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டுள்ளனர்.

தீப்பரவலுக்கு உள்ளான MT New Diamond கப்பலின் தலைவர் உட்பட பணிக்குழாமினரிடம் விசாரணைகளை மேற்கொள்ள குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று(12) காலியில் உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்திற்கு சென்றிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *