உண்ணாவிரத போராட்டத்தில் இருந்து விலகிய 25 கைதிகள்

(UTV | காலி) – பூஸ்ஸ சிறைச்சாலை கைதிகளால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில் இருந்து 25 கைதிகள் விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 20 கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளான ´பொடி லெசி´, ´வெலே சுதா´ மற்றும் ´கஞ்ஜிபானி இம்ரான்´ உள்ளிட்ட கைதிகள் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *