(UTV | ஜோர்தான்) – கொவிட் -19 வைரஸ் தொற்று ஜோர்தானிலும் வேகமாக பரவி வரும் நிலை காரணமாக பள்ளிகள், சிற்றுண்டிச்சாலைகள், சாலை வியாபார நிலையங்கள் மற்றும் அநேகமாக பாடசாலைகள் நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு மூடப்படுவதாக ஜோர்தான் அரசு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
குறித்த நடவடிக்கை காரணமாக நாட்டினை முழுமையாக முடக்கத் தேவையில்லை எனவும் கட்டம் கட்டமாக உரிய நடவடிக்கைளை முன்னெடுப்பதாகவும் குறித்த அரசு தெரிவித்துள்ளது.
அண்மைய நாட்களாக, ஜோர்தான் நாட்டில் ஒரு நாளுக்கு 200 இற்கும் அதிகமான வைரஸ் தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.