MT New Diamond கப்பலின் கெப்டனுக்கு வெளிநாடு செல்ல தடை [UPDATE]

(UTV | கொழும்பு) – இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய MT New Diamond கப்பலின் கெப்டனுக்கு நீதிமன்ற அனுமதியின்றி வௌிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

+++++++++++++++++++++ UPDATE 12.30 PM

MT New Diamond கப்பலின் கெப்டனை விளக்கமறியலில் வைக்க கோரிக்கை

கிழக்கு கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான ‘எம். டி நியூ டயமண்ட்’ (MT New Diamond) கப்பலின் கெப்டனை விளக்கமறியலில் வைக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்தே குறித்த குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பிலான உத்தரவினை இன்று பிற்பகல் 2 மணிக்கு வழங்குவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தீயைக் கட்டுப்படுத்த தானியங்கி பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றத் தவறியமை மற்றும் தீ பரவல் குறித்து பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு அறிவிக்கத் தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்த கெப்டனுக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *