சஜித் அணியின் பிரபலம் அரசியலில் இருந்து ஓய்வு

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பு மாவட்டத்தில் தேர்வான பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க அரசியலில் இருந்து ஓய்வடைய தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சமகி ஜன பலவேகயவின் உதயத்திற்கு முக்கிய பங்காளியாக இருந்த இவர் இம்முறை சமகி ஜன பலவேகயவை பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட போதிலும், அவர் தோல்வியடைந்திருந்தார்.

சுஜீவ சேனசிங்க அரசியல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் எதிர்காலத்தில் அரசியல் செய்யும் நோக்கம் இல்லை என்றும், தமது வியாபாரங்களை செய்து கொண்டு சாதாரண மக்கள் வாழ்க்கையினை வாழ்ந்து வருவதாகவும், மேலும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் உயர் கல்விக்காக ஹாவர்ட் பல்கலைக்கழகில் இணைய உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *