குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் சபா காலமானார்

(UTV | குவைத் ) – குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் சபா (Sheikh Sabah al-Ahmed al-Sabah) தனது 91 ஆவது வயதில் நேற்று(29) காலமானார்.

கடந்த ஜூலை மாதம் சிகிச்சை பெறுவதற்காக ஷேக் சபா, குவைத்தில் இருந்து அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார்.

1990, 19991 ஆண்டுகளில் வளைகுடா போர் மூண்டு குவைத்தை ஈராக்கிய படையினர் ஆக்கிரமித்தபோது, ஈராக்கை ஆதரிக்கும் நாடுகளுடனான உறவை மீள கட்டியெழுப்புவதில் முக்கிய பங்காற்றினார்.

குவைத்தில் சபா குடும்பம் கடந்த 260 ஆண்டுகளாக ஆட்சி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *