இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவிப்பு

(UTV | கம்பஹா) – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையின் ஊழியர்களை முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கமைய இதுவரை முன்னலையாகாத குறித்த தொழிற்சாலையின் ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நபர்கள் உடனடியாக சுகாதாரத் தரப்பை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 0113 45 6 548 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளுமாறு இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா கேட்டுக் கொண்டுள்ளார்.

மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையின் ஊழியர்கள், ஒதுக்கப்பட்டுள்ள 14 இடங்களில் ஒன்றுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *