கொல்கத்தா வேகப்பந்து வீச்சாளர் அலி கான் விலகல்

(UTV | துபாய்) –  ஐபிஎல் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் அமெரிக்க கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வேகப்பந்து வீச்சாளர் அலி கான் 2020 ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

காயம் காரணமாக அலி கான் 2020 ஐபிஎல் தொடரிலிருந்து விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல்-ன் ஊடக ஆலோசகர் அவரது காயத்தை உறுதிப்படுத்தினார், ஆனால் அவரது காயம் குறித்து எந்த விவரங்களையும் வழங்கவில்லை.

கொல்கத்தா அணி காயமடைந்த பந்து வீச்சாளர் ஹாரி கர்னிக்கு பதிலாக அலி கானை ஒப்பந்தம் செய்தது.

ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் நடந்த கரீபியன் பிரீமியர் லீக்கில் சாம்பியன் பட்டத்தை வென்ற டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் 29 வயதான அலி கான் இடம்பெற்றிருந்தார்.

பாகிஸ்தானில் பிறந்த அமெரிக்கரான அலி கான் கரீபியன் பிரீமியர் லீக்கில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அலி கான் விலகியுள்ளது கொல்கத்தா அணிக்கு பெரிய அடியாக அமைந்துள்ளது எனலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *