ஊரடங்கு சட்டத்தை மீறிய 120 பேர் கைது

(UTV | கொழும்பு) – கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில், ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, உத்தரவை மீறி பயணித்த 37 வாகனங்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *