அதிகரிக்கும் கொரோனா – ஸ்பெயினில் மீண்டும் அவசரநிலை

(UTV | கொழும்பு) –  ஸ்பெயினில் மீண்டும் கொரோனா வைரஸ் நோய்ப்பரவல் அதிகரித்துள்ளதால் அங்கு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டுப் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sanchez) அறிவித்தார்.

பல ஐரோப்பிய பிராந்தியங்களைப் போலவே கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஸ்பெயினில் முழுவதும் இரவு நேர ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரான்ஸில் நாளாந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேலும் 52 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதனால் அங்கு வைரஸ் தாக்குதலுக்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11 லட்சத்து 38 ஆயிரத்து 507 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் அந்நாட்டில் 116 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 761 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *