(UTV | கொழும்பு) – இலங்கையின் பல பகுதிகளில் தரமற்ற கை சுத்திகரிப்பான் (Hand Sanitizer)விற்பனை செய்யப்படுவதாக தங்களுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக இலங்கை சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான தரமற்ற கை சுத்திகரிப்பான் பயன்பாடு காரணமாக பல்வேறு சுகாதார பிரச்சினைகள் ஏற்படுவதாக சங்கத்தின் பிரதான செயாளர் பாலசூரிய தெரிவித்துள்ளார்.
இதனால் அவதானமாக இருக்குமாறு அவர் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் முகக் கவசம் பயன்படுத்தும் போது தரமான முகக் கவசங்களை பயன்படுத்துமாறு அவர் நாட்டு மக்களிடம் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.