அமெரிக்க துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ்

(UTV | அமெரிக்கா ) –  இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் துணை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கமலா ஹாரிஸ், என்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அமெரிக்க மக்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

வெற்றிக்கு உழைத்த மற்றும் வாக்களித்து ஜனநாயகத்தைக் காப்பாற்றிய அமெரிக்க மக்களுக்கு நன்றி எனவும் நம்பிக்கையுடன் அமெரிக்கா வந்த எனது தாயை இந்த வெற்றி தருணத்தில் நினைவு கூர்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகம் என்பது ஒரு நிலை அல்ல. அது ஒரு செயல்.துணை அதிபராகியுள்ள நான் முதல் பெண் தான், கடைசி பெண் அல்ல. இது தொடக்கம்தான். ஒரு பெண்ணை துணை அதிபராக தேர்வு செய்யும் துணிச்சல் பைடனுக்கு இருந்திருக்கிறது.

நமது நாட்டின் பெண்களுக்கு நிறைய சாத்தியங்கள் உருவாக காத்திருக்கின்றன.
கடந்த 4 ஆண்டாக சமத்துவம், சம உரிமைக்காக நாம் போராடி வந்தோம். இன வெறியை அகற்றுவோம் என உறுதிபடக் கூறுகிறேன். பைடனுக்கு வாக்களித்ததன் மூலம் நம்பிக்கை, கண்ணியம், ஒற்றுமைக்கு வாக்களித்துள்ளீர்கள் என தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *