(UTV | கொழும்பு) – கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தூர இடங்களுக்கான பயணிகள் பேரூந்து சேவை இன்று(11) முதல் ஆரம்பமாவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த தூர இடங்களுக்கான பேரூந்துகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் நிறுத்தப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கை போக்குவரத்து சபையின் அனைத்து குறுந்தூர பேருந்து சேவைகளும் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளன.