(UTV | ஹோண்டுராஸ்) – ஹோண்டுராசின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய அமெரிக்க நாடுகளை ஈட்டா என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்கியுள்ளது.
ஹோண்டுராஸ், எல் சல்வடோர், கவுதமாலா ஆகிய நாடுகளில் இந்த புயல் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஹோண்டுராசில் ஈட்டா புயல் தாக்கியதை தொடர்ந்து கடும் மழை பெய்துள்ளது.
இதனால், நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் சுமார் 70 ஆயிரம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஹோண்டுராசின் வடக்கு பகுதியில் உள்ள பல நகரங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 6 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්