(UTV | கொழும்பு) – கொவிட் 19 பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள, வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் பராமரிக்கப்படுகின்ற அனைத்து சுற்றுலா விடுதிகளும் இன்று(05) முதல் மீண்டும் திறக்கப்படும்.
மேலும், முகாமிட்டு தங்குவதற்கான சுற்றுலா நடவடிக்கைகளும் மீண்டும் இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.