(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 36,049 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 660 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில், 660 பேர் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புடையவர்களும் 2 பேர் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,061 ஆக அதிகரித்துள்ளதுடன், கொரோனா தொற்றுக்குள்ளான 8,828 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 165 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්