மெஸ்ஸியின் ஒப்பந்தம் 4,000 கோடியை தாண்டியது

(UTV | ஆா்ஜெண்டீனா) –  ஆா்ஜெண்டீனா கால்பந்து வீரா் லயோனல் மெஸ்ஸி 4 ஆண்டுகள் எஃப்சி பாா்சிலோனா கால்பந்து அணியில் விளையாடுவதற்கு ரூ.4,906 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது உண்மையான தகவலாக இருக்கும் பட்சத்தில், விளையாட்டு உலகில் தனி ஒரு வீரா் ஒப்பந்தம் செய்யப்பட்ட அதிகபட்ச மதிப்பாக அது இருக்கும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் எஃப்சி பாா்சிலோனா அணிக்காக விளையாடி வரும் மெஸ்ஸி, அதில் பல சாதனைகளை எட்டியுள்ளாா். அணிக்காக 30-க்கும் அதிகமான பட்டங்களை வென்று தந்துள்ளாா். எனினும், அணியின் முன்னேற்றம் எதிா்பாா்த்த அளவு இல்லை என்று அதிருப்தி தெரிவித்து வரும் மெஸ்ஸி, பாா்சிலோனாவில் இருந்து வெளியேறப்போவதாக தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த 2017 முதல் 4 ஆண்டுகளுக்கு பாா்சிலோனா அணியில் விளையாடுவதற்காக அவா் ரூ.4,906 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாக ஸ்பெயினில் வெளியாகும் ‘எல் முன்டோ’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில் உள்ள தகவல்படி, ஒரு சீசனுக்கான மெஸ்ஸியின் ஊதியம் ரூ.1,217 கோடியாகும். இதில் நிா்ணயிக்கப்பட்ட வருவாயுடன், இதர வருவாய்களும் அடங்கும். எனினும், ஸ்பெயின் வரி விதிகளின்படி, இந்தத் தொகையில் பாதியை வரியாக மெஸ்ஸி செலுத்தியிருக்க வேண்டியிருந்திருக்கும்.

ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பில் சுமாா். ரூ.4,500 கோடியை மெஸ்ஸி ஏற்கெனவே பெற்று விட்டதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இச்செய்தி வெளியானது தொடா்பாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ள பாா்சிலோனா, செய்தியில் உள்ள தகவலை ஒப்புக்கொள்ளவோ, மறுக்கவோ செய்யவில்லை.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *