பெப்ரவரி 14 : நிகழ்வுகளுக்கு தடை

(UTV | கொழும்பு) – பெப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினத்தன்று, சுகாதாரத் துறையினரின் அனுமதியின்றி, எந்தவொரு நிகழ்வையும் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இணையதளங்கள், சமூக வலைதளங்கள் ஊடாக, இவ்வாறான நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இது குறித்து தீவிர அவதானத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் கொவிட் தொற்று நிலைமையை அவதானிக்கும்போது, குறிப்பாக காதல் தொடர்புகள், விருந்துபசாரங்கள், திருமண நிகழ்வுகள் என்பன தொற்று பரவலுக்கும், கொத்தணிகள், துணைக் கொத்தணிகளின் உருவாக்கத்திற்கும் காரணமாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, இது தொடர்பில் தங்களின் அவதானம் செலுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *