உடற்தகுதி சோதனை : தோல்வியுறும் வீரர்களுக்கு 40 நாட்களுக்குள் காலக்கெடு

(UTV | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்களுக்கான உடற்தகுதியை பரிசோதிப்பதற்கான திட்டம் ஒன்று நேற்று(12) முன்னெடுக்கப்பட்டது.

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடரில் விளையாடுவதற்காக தெரிவு செய்யப்பட்ட இலங்கை அணியின் 36 வீரர்களுக்கு இவ்வாறு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதில் 32 வீரர்கள் பங்குப்பற்றியதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பின்னபற்றப்பட்டுவந்த யோ- யோ முறைமைக்கு பதிலாக இந்த புதிய உடற்தகுதி சோதனை முறைமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2 கிலோமீற்றர் தூரத்தை 8 நிமிடமும் 35 விநாடிகளில் ஓடி முடிக்க வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளது.

இதேவேளை, பந்துவீச்சாளர்கள், துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் விக்கெட் காப்பாளர் உள்ளிட்டவர்களுக்கு வெவ்வேறு நேர இலக்கு வழங்கப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் தோல்வியுறும் வீரர்கள் 40 நாட்களுக்குள் மீண்டும் தமது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் இருபதுக்கு 20 உலகத் தொடருக்கு முன்னர் அணி வீரர்களின் உடல் தகுதியை மேம்படுத்துவதே நோக்கமாக அமைந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் உடல் செயல்திறன் தொடர்பான முகாமையாளர் கிராண்ட் லுடன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இன்றைய சோதனையில் குசல் மெண்டிஸ், தனஞ்சயடி சில்வா, அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் லஹிரு திருமன்ன ஆகியோர் நேற்றைய சோதனையில் பங்கேற்கவில்லை எனவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *